சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் 5வது பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டு உள்ளது.
கருப்புப் பணம் பதுக்கலைத் தடுக்கும் வகையில் 2019 முதல் இந்தியாவுடனான தகவல் பரிமாற்ற ஒப்பந்தப்படி வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலை ஸ்விஸ் அரசு வெளியிட்டு வருகிறது.
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் இந்த பட்டியல் அளிக்கப்படுகிறது. அதன்படி கடந்த மாதம் 5வது பட்டியலை ஸ்விஸ் அரசு இந்தியாவிடம் அளித்துள்ளது.
ஆயினும் இந்தப் பட்டியலில் உள்ள பெயர்களை அரசு பகிரங்கமாக வெளியிடவில்லை. இதுவரை மொத்தம் 104 நாடுகளின் 36 லட்சம் வங்கிக்கணக்கு விவரங்களை ஸ்விஸ் அரசு வெளியிட்டுள்ளது.