ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், அதன் செயல்பாடு நன்றாக இருப்பதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 2-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம், 4 மாதம் பயணித்து பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லாக்ராஞ்சியன் எல்1 என்ற புள்ளியில் நிறுத்தப்பட்டு சூரியனை ஆய்வு செய்யவுள்ளது.
இந்நிலையில் இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், லாக்ராஞ்சியன் எல்1 புள்ளியை நோக்கி ஆதித்யா விண்கலம் திட்டமிட்டப்படி பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்கலத்தை ஹாலோ சுற்றுப்பாதையை நோக்கி செலுத்துவதற்கான பணி வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், கடந்த 6-ம் தேதி 16 விநாடிகள் அப்பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.