வெள்ளத்தால் உருக்குலைந்த சிக்கிமில் இன்று மத்திய அரசின் குழு நேரடியாக ஆய்வு செய்ய உள்ளது.
மாநிலஅரசுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்ததையடுத்து வெள்ளச்சேதத்தைப் பார்வையிட மத்தியக் குழு இரண்டு நாள் பயணமாக இன்று சிக்கிம் வந்துள்ளது.
சிக்கிம் வெள்ளநிலவரத்தைக் கண்காணித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதனிடையே சிக்கிம் வெள்ளத்தில் காணாமல் போன 22 ராணுவ வீரர்களில் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதர 14 வீரர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.இதுவரை 53 பேர் பலியானதாகவும் 140 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.