சிக்கிமில் மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 40-ஐ தாண்டியுள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 142-ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளது.
வெள்ள பாதிப்பு பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியிலும், பாலங்கள், சாலைகள் உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணியிலும், மாநில நிர்வாகத்துடன் இணைந்து, ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, எல்லை சாலைகள் அமைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மங்கன் பகுதிக்கு இந்திய ரிசர்வ் படையின் 3-வது பட்டாலியன் பிரிவு வீரர்கள் விரைந்துள்ளனர்.
மீட்பு நடவடிக்கைக்காக சிக்கிமில் வீரர்கள் குவிந்துள்ள போதிலும், மோசமான வானிலையால் மீட்பு முயற்சிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.