வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.5 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார்.
மொத்த பணவீக்கம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.6 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், அதனை 4 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால், வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.