இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டம் தர்மசாலாவில் உள்ள அரசு அலுவலகத்திற்கு வெளியே எழுதப்பட்டிருந்த காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை போலீசார் அழித்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்துள்ள தர்மசாலா காவல்துறை, விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் முக்கிய இடங்களை குறிவைத்து, மர்ம நபர்கள், காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை அண்மைக்காலமாக எழுதி வருகின்றனர்.
கடந்த மாதம் 27-ம் தேதி, டெல்லி காஷ்மீரி கேட் மேம்பால சுவரிலும் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.