2 ஆயிரம் ரூபாயை மாற்றுவதற்கான தேதி இன்றுடன் முடிவடையும் நிலையில், அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடப்பில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்தது. 3 லட்சத்து 32 ஆயிரம் கோடி அளவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் 93 சதவீத பணம் திரும்ப வந்து விட்டதாக இந்த மாதத் தொடக்கத்தில் கூறப்பட்டிருந்தது.
இதனிடையே ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தத் தேதி நீட்டிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.