தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூரில் தனது படத்தின் அறிமுக நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நடிகர் சித்தார்த்தை கன்னட அமைப்பினர் விரட்டி வெளியேற்றினர்
தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளியாகி உள்ள சித்தா என்ற புதிய படம் கன்னடத்தில் சிக்கா என்ற பெயரில் வெளியாக உள்ளது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூர் நகரின் மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள எஸ் ஆர் வி திரையரங்கில் சிக்கா படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் பங்கேற்றார். இதனை கன்னட அமைப்பினர் தடுத்து வாக்குவாதம் செய்தனர்
அவர்களது எதிர்ப்பை சமாளிக்க செய்தியஆளர்களிடம் கன்னடத்தில் பேசிய சித்தார்த்தின் ஆக்டிங் அவர்களிடம் பலிக்கவில்லை. தமிழ் நடிகர் இங்கு பேசக்கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்
அவர்களை உற்றுனோக்கியபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த சித்தார்த்தை வெளியே போகச்சொன்னதோடு, செய்தியாளர்களை நோக்கியும் , காவிரி நீருக்காக நம்ம மாநிலமே போராடிக் கொண்டிருக்கும் போது இவரது சினிமா அவசியம் தானா ? என்று கேள்வி எழுப்பினர்
இதையடுத்து சிக்கா படத்தின் பேனர் அகற்றப்பட்ட நிலையில், செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே கைவிட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டா நடிகர் சித்தார்த்..!