மணிப்பூரில் மாயமான இரு மாணவர்கள் சடலமாகக் கிடக்கும் புகைப்படம் வெளியான நிலையில் அங்கு மீண்டும் வன்முறை தலைதூக்கியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் காணாமல் போன இருவரின் உடல்களும் வனப்பகுதியில் கிடப்பது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டதால் மொபைல் போன் இணைய சேவைக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் வரும் வெள்ளிக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் பிரேன்சிங் இல்லத்தை முற்றுகையிடச் சென்ற நூற்றுக்கும் அதிகமான மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இதனிடையே, மாணவர்களின் மரணம் குறித்து விசாரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவின் சிறப்பு இயக்குநர் தலைமையிலான குழு மணிப்பூருக்கு இன்று செல்கிறது.