ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாநாட்டின் இடையே ஐநா.சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸை ஐநா.சபை தலைமையகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜி 20 நாடுகளுக்குத் தலைமை ஏற்ற இந்தியா ஐநா.வின் செயல்பாடுகளில் முக்கியப் பங்களிப்பை வழங்கும் என்று உலகம் முழுவதும் நம்பிக்கை வளர்ந்திருப்பதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இச்சந்திப்பு குறித்து டிவிட்டர் மூலம் கருத்து பகிர்ந்த ஐ.நா.சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், ஐநா சபை சீர்திருத்தம் உள்ளிட்ட இந்தியாவின் கோரிக்கைகள் குறித்து ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியது மகிழ்ச்சியளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.