மாத ஊதியம் பெறாத மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஸ்பெயின் நாட்டு பயணத்தின் போது ஓட்டலில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு 3 லட்ச ரூபாய் செலவிட்டது எப்படி என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் பேட்டி அளித்த அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, டெங்கு காய்ச்சல் பரவி மக்கள் திண்டாடி வரும் நிலையில் ஸ்பெயின் நாட்டுக்கு மம்தா பயணம் மேற்கொண்டதாக விமர்சித்துள்ளார்.
டெங்கு அபாயம் குறித்து ஏற்கனவே எச்சரித்தும் மம்தா அதை பொருட்படுத்தவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இண்டியா கூட்டணி என்ற பெயரில் தேர்தலை ஒன்றாக சந்திக்க காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் திட்டமிட்டுள்ள நிலையில் ஆதிர்ரஞ்சன் சவுத்ரியின் விமர்சனத்தால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.