காஷ்மீர் பள்ளத்தாக்கில் தாக்குதலுக்கு தயார் நிலையில் 80-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இருப்பதாகவும், அவர்களில் 33 பேர் உள்ளூரை சேர்ந்தவர்கள் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் என்றும், அவர்களுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த 13-ம் தேதி இந்திய வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்த தாக்குதலுக்கு இந்த தீவிரவாதிகளின் சதியே காரணம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களை பிடிக்க அனந்த்நாக் மாவட்டத்தில் தொடர் தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும், தாக்குதலின் முக்கிய நபரான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதி முகமது உசைர் கானை, கோகர்நாக் வனப்பகுதியில் வீரர்கள் சுற்றி வளைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.