விசாகப்பட்டினத்தில் இருந்து மும்பை வந்த தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று பலத்த மழைக்கு இடையில் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகியதுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக விமான ஓடுபாதை மூடப்பட்டது. இதனால் இரண்டு விஸ்தாரா விமானங்கள் மற்றும் ஒரு ஆகாசா ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டன.
துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்துக்குத் திருப்பி விடப்பட்டது.டேராடூனில் இருந்து மும்பை வந்த விஸ்தாரா விமானம் கோவாவுக்குத் திருப்பி விடப்பட்டது.5 விமானங்கள் சூரத்தில் தரையிறக்கப்பட்டன.
மேலும் 2 விமானங்கள் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. விபத்துக்குள்ளான விமானத்தில் 6 பயணிகளும் இரண்டு விமான ஊழியர்கள் இருந்ததாகவும் அவர்களில் 3 பேர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்