தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் 70க்கும் மேற்பட்ட குற்ற செயல்களில் தொடர்புடைய குற்றவாளி கேரள போலீசிடமிருந்து தப்பிய நிலையில், கடையம் போலீசாரிடம் சிக்கினார்.
தென்காசி மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன், கேரளாவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு அம்மாநில போலீஸ் பாதுகாப்பில் இருந்தபோது தப்பி தலைமறைவானார்.
பாலமுருகனை இருமாநில போலீசாரும் தேடி வந்த நிலையில், ராமநதி அணை வனப்பகுதியில் மொட்டையடித்து மாறுவேடத்தில் பதுங்கியிருந்தபோது தமிழக போலீசாரிடம் சிக்கிய அவர், கேரள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.