அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சி என்ற மந்திரம் மூலம் சர்வதேச நாடுகளிடையே நிலவும் நம்பிக்கையின்மையை மாற்ற முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் துவக்க உரையாற்றிய பிரதமர், ஒற்றுமையின் சின்னமாக விளங்கும் இந்தியா ஒளிர்வதைக் கண்டு உலகமே வியப்பதாக கூறியுள்ளார்.
21ம் நூற்றாண்டு உலகிற்கு, புதிய திசையை காட்டுவதற்கான முக்கிய தருணம் இது என குறிப்பிட்ட அவர், வளமான எதிர்காலத்திற்கு உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
கொரோனாவை வீழ்த்த முடிந்த நம்மால் உக்ரைன் போரால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்தும் மீளமுடியும் என்றும், பயங்கரவாதம், இணையப் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உறுதியான தீர்வைக் காண வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.