காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் சிக்கினர்.
ஷீரி என்ற கிராமப்பகுதியில் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்து, அவர்களுக்கு ஆதரவாக நிழல் உலக வேலைகளில் ஈடுபட்டு வரும் இருவர் பதுங்கியிருப்பதாக காஷ்மீர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்புப் படையினர் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
அப்போது அவர்களைக் கண்ட தீவிரவாதிகள் தப்பியோட முயன்ற போது கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட தீவிரவாதிகளிடம் இருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.