பிரக்யான் ரோவர் தனது பணிகளை வெற்றிகரமாக முடித்து விட்டு ‘ஸ்லீப் மோட்’ நிலைக்கு சென்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் 'சந்திரயான்-3' விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி ஏவப்பட்டது.
விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய 'பிரக்யான்' ரோவர் நிலனின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. நிலவின் தென்துருவத்தில் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தூரம் பயணித்துள்ளது. நிலவில் அடுத்த 14 நாட்கள் இரவுப்பொழுதாக இருக்கும் என்பதால் ரோவர் 'ஸ்லீப் மோட்' நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ரோவரின் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 22 அன்று சூரிய உதயத்தின் போது சோலார் பேனல் ஒளியைப் பெறும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. ரிசீவரும் ஆன் செய்யப்பட்டுள்ளது. பணியை மீண்டும் தொடர்வதற்காக ரோவர் விழித்துக் கொள்ளும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.