நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான பாதையைத் தேடி பிரக்யான் ரோவர் சுற்றி வலம் வந்த காட்சியை விக்ரம் லேண்டரின் கேமரா படம் பிடித்துள்ளது.
சந்திரனில் குழந்தை விளையாடுவதை தாய் பாசத்துடன் வேடிக்கை பார்ப்பது போல அக்காட்சி அமைந்திருப்பதாகவும் இஸ்ரோ வர்ணித்துள்ளது.
தென் துருவத்தில் மேற்பரப்பின் தன்மை, அதில் உள்ள தனிமங்கள் போன்றவற்றை ரோவர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் இருப்பதை ரோவரில் உள்ள ஏ.பி.எக்ஸ்.எஸ். கருவி கண்டறிந்துள்ளது.
சல்பர் தவிர வேறு சில சிறு தனிமங்களையும் அந்த கருவி கண்டுபிடித்திருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சல்ஃபர் இருப்பதற்கு காரணம் எரிமலையா? எரிகல்லா? அல்லது வேறு ஏதாவதா என்று விஞ்ஞானிகள் இனி ஆய்வு செய்வார்கள் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.