இந்தியாவில் லேப் டாப் தயாரிக்க 32 முன்னணி நிறுவனங்கள் விண்ணப்பித்திருப்பதாக தகவல் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
HP, Dell, Lenovo, Thompson, Acer, Asus போன்ற நிறுவனங்கள் லேப் டாப் தயாரிக்கும் என்றும் HP, VVDN, Lenovo போன்ற நிறுவனங்கள் சர்வர்களைத் தயாரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ஆண்டுக்கு 3 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி அதிகரிக்கும் என்றும், 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உற்பத்தியைப் பொருத்து ஊக்கத் தொகை என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இதுவரை 32 நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்திருப்பதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
லேப் டாப்களை உள்நாட்டில் தயாரிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதிகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.