பிரக்யான் எடுத்த விக்ரமின் புகைப்படம்
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ள பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரை எடுத்த புகைப்படம் வெளியீடு
பிரக்யான் ரோவரில் உள்ள நேவிகேஷன் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ தகவல்
சேஸ்ட் மற்றும் இல்ஸா கருவிகள் லேண்டரில் ஆய்வு மேற்கொள்ளும் காட்சிகள் புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளன
நிலவின் மேற்பரப்பின் வெப்ப நிலையை சேஸ்ட் கருவியும் நிலவில் ஏற்படும் நில அதிர்வுகள் குறித்து இல்ஸாவும் ஆராய்கின்றன
இதற்கு முன் பிரக்யான் ரோவரை விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பி புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன
லேண்டரை ரோவர் எடுத்துள்ள புகைப்படத்தை இஸ்ரோ வெளியிடுவது இதுவே முதன்முறையாகும்