தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில் 3 நாட்கள் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவதற்கான நடவடிக்கைகள் இறுதி செய்யப்பட்டு வருவதாக வெளியுறவுச் செயலாளர் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு நடக்கும் பட்சத்தில் இரு தலைவர்களும் 2020ம் ஆண்டு கால்வான் மோதலுக்குப் பின் சந்திக்கும் முதல் சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக சமர்கண்டில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும், பாலியில் நடந்த ஜி20 மாநாட்டிலும் இரு தலைவர்களும் பங்கேற்றாலும் பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.