சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரை நாளை நிலவில் தரையிறக்க முடிவு செய்திருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில் உள்ளது. விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் கடந்த 17ம் தேதி வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது.
தற்போது நிலவுக்கு வெகு அருகில் சுற்றி வரும் சந்திரயான் விண்கலத்தின் லேண்டரை நாளை நிலவில் தரையிறக்கத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாளை மாலை 5.20 மணி முதல் 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 3 நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காண இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது. இஸ்ரோவின் யூடியூப், பேஸ்புக், டிடி பொதிகை டிவியிலும் நேரலையில் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.