பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்தின் மீட்புப் பணிகள் தொடர்பாக பிரதமர் மோடி தமது இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன் ஆலோசனை நடத்தினார்.
மறுபுறம், சிம்லா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 6-வது நாளாக நீடிக்கிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவ வீரர்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு ஆபத்து நிறைந்த இடங்களில் வசிக்கும் மக்கள் வெளியேறி வருகின்றனர். கடந்த ஞாயிற்று கிழமை முதல் கனமழை மற்றும் நிலச்சரிவை எதிர்கொள்ளும் அம்மாநிலத்தில் இதுவரை 81 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.