குஜராத்தில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி கிண்டல் செய்யப்பட்டதால் பெண் எம்.பி மற்றும் மேயரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியான ரிவாபா ஜடேஜா ஜாம் நகர் வடக்குத் தொகுதி எம்எல்ஏவாகவும், பாஜக தலைவருமாக இருந்து வருகிறார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக தனது காலணிகளைக் கழற்றியுள்ளார்.
இதனை நகராட்சி மேயர் பினா கோத்தாரியும், எம்.பி பூனம்பென் மடமும் கிண்டல் செய்ததாகத் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரிவாபா அனைவரின் முன்னிலையிலும் அவர்கள் இருவருடனும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.