மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து பாஜக மத்திய கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
அடுத்த ஆண்டில் மக்களவைக்கும் மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான், மீசோரம் ஆகிய 5 மாநிலங்களும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் கடும் போட்டி நிலவக் கூடிய தொகுதிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.