சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணிற்கு அனுப்பப்பட உள்ள ஆதித்யா - எல் 1 விண்கலம் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
பி.எஸ்.எல்.வி. - சி57 ராக்கெட் மூலம் வரும் செப்டம்பரில் அந்த விண்கலத்தை ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் சூரியனை நோக்கி அந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனின் காந்தப்புலம், சூரியனால் பூமியில் ஏற்படும் மாற்றங்கள், சூரியனுடைய வெளி அடுக்கு, புற ஊதாக்கதிர்களை அந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிய புயல், அது எவ்வாறு உருவாகிறது, அதன் தாக்கம் குறித்தும் ஆராயப்பட உள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.