ஜி.எஸ்.டி. திருத்த மசோதா, வனத் திருத்த மசோதா, டெல்லி நிர்வாக மசோதா, குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் மசோதாக்கள் என நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் மொத்தம் 22 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்திய குற்றவியல் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, 3 புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கான மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க வகை செய்யும் இரு மசோதாக்களுக்கும் மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.