பாகிஸ்தான், மற்றும் பிரிவினைவாத கட்சிகளின் ஹூரியத் கூட்டமைப்புடன் காஷ்மீர் பற்றி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நேற்று பேசிய அமித் ஷா, காஷ்மீரில் உள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் பாகிஸ்தானுடனும் ஹூரியத்துடனும் பேச்சுக்கு இடமே இல்லை என்றும் தெரிவித்தார். ஜவகர்லால் நேருவின் தவறான கொள்கையால் சட்டப்பிரிவு 370 உருவாக்கப்பட்டதாகவும், மோடி வரலாற்று சிறப்பான முடிவெடுத்து சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்ததாகவும் அவர் விளக்கினார்.
தீவிரவாதத்தால் சுமார் 40 ஆயிரம் பேர் உயிரிழந்து விட்டதாகவும் சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.