மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு இன்று பிரதமர் மோடி பதில் அளிப்பார் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் 26ம் தேதி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே நடைபெற்ற காரசார விவாதங்களைத் தொடர்ந்து இன்று மக்களவைக்கு பிரதமர் மோடி வருகை தந்து விவாதத்துக்கு பதில் அளிக்கிறார். பிரதமரின் பதிலைத் தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
ஆளும் தேதிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 331 எம்பிக்களின் ஆதரவு உள்ளது .26 எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் ஒரே கூட்டமைப்பாக ஒன்று சேர்ந்த நிலையில் அவற்றின் பலம் 144 ஆக உள்ளது. இருதரப்பிலும் சேராக எம்பிக்களின் எண்ணிக்கை 70 ஆக உள்ளது.