ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக கூறப்படுவது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் புகார் அளித்துள்ளனர்.
தமது உரையை முடித்துக் கொண்டு ராஜஸ்தான் செல்வதற்காக அவையில் இருந்து ராகுல் காந்தி வெளியே வந்த போது, அவரது கையில் இருந்த சில கோப்புகள் கீழே தவறி விழுந்ததாகவும் அதைப் பார்த்து பா.ஜ.க. எம்.பி.க்கள் சிலர் சிரித்ததாகவும் கூறப்படுகிறது.
அவர்களைப் பார்த்து ராகுல் காந்தி பறக்கும் முத்தம் வீசியதாக சொல்லப்படுகிறது. இது பற்றி அவையில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, பெண் எம்.பி.க்களும் உள்ள நிலையில் ராகுலின் செயல் அருவருப்பானது, ஆபாசமானது என தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே தலைமையில் பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் சபாநாயகர் ஓம் பிர்லா சந்தித்து ராகுல் காந்தி மீது புகார் அளித்தனர்.
ராகுல் காந்தியின் செயல் அவையின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் இருப்பதால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.