எதிர்க்கட்சியினர் நம்பிக்கையின்மையால் நிரம்பி இருப்பதால் தான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் தலைமையில், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. அதில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்கும் பாஜக எம்.பி.க்களுக்கு, பிரதமர் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் பேசிய பிரதமர் சமூக நீதி குறித்து பேசுபவர்கள் தான் தங்கள் வாரிசு அரசியல் மற்றும் ஊழல் அரசியலால் சமூக நீதிக்கு பெரும் தீங்கு இழைத்துள்ளதாக கூறினார்.
டெல்லி அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதா, நாடாளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி என்று எதிர்க்கட்சியினர் கூறி இருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர், அரையிறுதியில் வென்றதற்காக பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு வாழ்த்து தெரிவித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.