மத்தியப் பிரதேசம் இந்தூர் அருகே உள்ள அருவியில் சுற்றுலா சென்ற தந்தையும் 13 வயது மகளும் காரில் சென்றுக் கொண்டிருந்த போது அந்தக் கார் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து நீருக்குள் மூழ்கியது.
இதனைக் கண்டு அருவியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் நீந்தி தந்தையையும் மகளையும் உயிருடன் மீட்டனர்.
காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், காரை பள்ளத்துக்கு அருகில் நிறுத்தியிருந்த ஓட்டுனரின் கவனக்குறைவால்தான் கார் நீருக்குள் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.