இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக மூன்றில் இரண்டு பங்கு தூரத்தைக் கடந்து நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இன்று நுழைகிறது.
இன்று இரவு 7 மணியளவில் சந்திரயான் 3 நிலவின் உள்வட்டப் பாதையில் செலுத்தப்பட உள்ளது.இந்த முக்கியமான கட்டத்தில், விண்கலம் சந்திரனின் செல்வாக்கு மண்டலத்திற்குள் நுழைவதையும், சந்திரனை மையமாகக் கொண்ட பயணத்தைத் தொடங்குவதையும் காண முடியும்.
பூமியை விட்டு அது இரண்டரை லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் நிலவை நெருங்கிக் கொண்டிருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.