மணிப்பூரில் பதிவான 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன்முறைகள் தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உச்சநீதிமன்றம் மத்திய மாநில அரசுகளிடம் கேள்வி எழுப்பியுள்ளது. உச்சநீதிமன்றம் தானாகவே தலையிட்ட பிறகுதான் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நடந்தது என்ன என்று விசாரிக்க நடுநிலையான நபர்களைக் கொண்ட தனி உயர் அதிகாரக் குழுவை அமைக்கவும் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.
மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை வழங்குவதற்கு ஒரு பெரிய தேவை உள்ளது என்றும், நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை உணர்வை மீட்டெடுக்க வேண்டியிருப்பதாகவும் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.