எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள உரசல்கள் காரணமாக சீனா மீதான நம்பிக்கை அற்றுப் போய்விட்டதாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், சீனாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஆணையத்தின் தலைவர் வாங் யீயை சந்தித்துப் பேசினார்.
அப்போது, 2020ம் ஆண்டு ஏற்பட்ட ராணுவ சிக்கல்களை முழுமையாகத் தீர்க்கும் வரை உறவுகள் இயல்பானதாக இருக்க முடியாது என்று அஜித் தோவல் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், இரு தரப்பு உறவுகள் இடையிலான தடைகளை நீக்க, எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும், நிலைமையை முழுமையாக தீர்க்கவும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.