மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.
மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் தர எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு அவைகளிலும் அலுவல்கள் தடைபட்டன.
மக்களவையில் எதிர்க்கட்சியினரின் அமளியை மீறி அலுவல்களை நடத்த சபாநாயகர் முயற்சி செய்தார். கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா தொடர்பான விவாதம் நடந்த போதும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கமிட்டபடி இருந்தனர்.
இந்நிலையில், இரு அவைகளின் எதிர்கட்சித் தலைவர்களான ஆதிர் சவுத்ரிக்கும், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அமித் ஷா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மணிப்பூர் விவகாரத்தில் கட்சி பாகுபாடுகளை கடந்து அனைவரின் ஒத்துழைப்பை நாடுவதாகவும் அமித்ஷா கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.