மணிப்பூரில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் 700க்கும் மேற்பட்ட மியான்மர் அகதிகள் உரிய ஆவணங்கள் இன்றி உள்ளே நுழைந்தது எப்படி என எல்லையைப் பாதுகாக்கும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவிடம் மாநில அரசு விளக்கம் கேட்டுள்ளது.
முன்னதாக அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினர் தங்கள் தலைமையகத்திற்கு அனுப்பியுள்ள அறிக்கையில், கடந்த 23ம் தேதி சந்தேல் மாவட்டம் வழியாக 718 மியான்மர் அகதிகள் எல்லையைத் தாண்டி நுழைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உரிய ஆவணங்கள் இன்றி வந்த மியான்மர் அகதிகள் மூலம் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கொண்டு வரப்பட்டதா என விளக்கம் அளிக்கும்படி அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினரை மணிப்பூர் மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் சட்டவிரோதமாக நுழைந்த மியான்மர் அகதிகளின் புகைப்படங்கள் மற்றும் பயோமெட்ரிக் விபரங்களை வைத்திருக்குமாறு சந்தேல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.