பெண்களுக்கு எதிரான தாக்குதல் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவதால் மணிப்பூர் மாநிலத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எந்த நேரத்திலும் ஆதிக்க சக்தியாக விளங்கும் மெய்தி சமூகத்தினர், பழங்குடியின குக்கி சமூகத்தினரை தாக்கும் அபாயம் உள்ளதால், 24 மணி நேர உதவிக்கான தொலைபேசி எண்ணை மணிப்பூர் அரசு வெளியிட்டுள்ளது.
வதந்தி பரவி மோதல் உருவாகும் சூழல் இருந்தால் தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் வன்முறை சம்பவங்களின் போது கொள்ளை அடிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு போலீசார் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். மாநிலம் முழுவதும் 126 சோதனைச் சாவடிகளை அமைத்து, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.