முந்தைய ஆட்சியில் ஃபோன் பேங்கிங் ஊழல் வங்கித் துறையின் முதுகெலும்பை உடைத்து விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ரோஜ்கர் மேளா எனப்படும் வேலைவாய்ப்பு திருவிழாவின் ஒரு பகுதியாக நாடு முழுவழதும் 70 ஆயிரம் பேருக்கு காணொளி மூலம் வழங்கிப் பேசிய பிரதமர், முந்தைய ஆட்சியில் குறிப்பிட்ட ஒரு குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் வங்கிகளுக்கு ஃபோன் மூலம் பரிந்துரைத்ததன் பேரில், சிலர் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்பச் செலுத்தவில்லை என்றார்.
இது தான் ஃபோன் பேங்கிங் ஊழல் என்று தெரிவித்துள்ள பிரதமர், அந்த ஊழலால் நொடிந்த வங்கித் துறைக்கு கடந்த 9 ஆண்டுகளில் தாங்கள் புத்துயிர் ஊட்டி இருப்பதாக கூறியுள்ளார். தற்போது உலகில் வங்கித் துறை வலுவாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். முந்தைய ஆட்சிக் காலம் போல் அல்லாமல், தற்போது 140 கோடி மக்களும் ஃபோன் பேங்கிங்கை பயன்படுத்த இயலுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.