உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் மின்கசிவு ஏற்பட்டு உதவி ஆய்வாளர், பாதுகாவலர் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.
கங்கை நதி தூய்மை திட்டத்தின் கீழ் அலக்நந்தா ஆற்றங்கரையின் அருகே பால கட்டுமானப் பணியின்போது மின்கசிவு ஏற்பட்டதில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஆற்றுப் பாலத்தின் இரும்பு கைப்பிடியில் இரண்டாவது முறையாக மின்கசிவு ஏற்பட்டதில் பலர் சுருண்டு விழுந்தனர். இதில் 16 பேர் உயிரிழந்ததாகவும், 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காயமடைந்த 7 பேர் ஹெலிகாப்டர் மூலமாக ரிஷிகேஷ் கொண்டு செல்லப்பட்டு எய்மஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.