நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 11ந் தேதி வரை 17 அமர்வுகளாக நடைபெற உள்ளது.
பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் அலுவல்கள் தொடங்கி பின்னர் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்திற்கு இடம் மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது பிரதமர் மோடி உரை நிகழ்த்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தொடரில் 31 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முயன்று வருவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
தனிநபர் டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு மசோதா, வனப் பாதுகாப்பு மசோதா, டெல்லி சேவைப் பிரிவினர் அதிகாரம் தொடர்பான மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. முன்னதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற அலுவல்கள் சுமுகமான முறையில் நடைபெற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு நாடியுள்ள நிலையில், அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.