பெங்களூருவில் 2ஆம் நாளாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆலோசனை மேற்கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் வியூகங்கள் தொடர்பாக இரு நாட்களாக 26 எதிர்கட்சிகள் ஆலோசனை நடத்தினர். கார்கே, சோனியா, சரத்பவார், லாலு உள்ளிட்ட மூத்த தலைவர்களும், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், நிதிஷ் குமார் உள்ளிட்ட 7 மாநிலங்களின் முதலமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய கார்கே, காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தின் மீதோ, பிரதமர் பதவியின் மீதோ விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்.
மாநில அளவில் கட்சிகள் இடையே சில வேறுபாடுகள் இருந்தாலும், மக்கள் நலனிற்காக அதனை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதனிடையே, கூட்டணிக்கு 'இந்திய மக்கள் முன்னணி' என பெயர் சூட்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ யோசனை தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.