பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளை கண்காணிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 97 டிரோன்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த டிரோன்கள் கடல் மற்றும் நிலம் ஆகிய இரு இடங்களிலும் கண்காணிப்பை மேற்கொள்ள பயன்படுத்தப்படும். இதில் அதிகளவிலான டிரோன்கள் இந்திய விமானப்படைக்கு வழங்கப்பட உள்ளன.
தொடர்ச்சியாக 30 மணி நேரம் பறக்கும் ஆற்றலுடன் இவை உருவாக்கப்பட உள்ளன.ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளில் 46 ஹெரான் ஆளில்லாத டிரோன்கள் வாங்கப்பட்டு முப்படைகளின் பயன்பாட்டில் உள்ளன.
அண்மையில் 31 பிரேடட்டர் டிரோன்களை வாங்கவும் பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது.