சிவிங்கிப் புலிகளின் உயிரிழப்புகளுக்கு காரணம் என்ன என்று விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய புலிகள் காப்பக ஆணையம் தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா, நமீபியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச விலங்கியல் நிபுணர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளது. சுமார் 20 சிவிங்கிப் புலிகள் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியாவில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய வனவிலங்குப் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டன.
அதில் 5 சிவிங்கிப் புலிகள் அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டன. இதர 11 சிவிங்கிப் புலிகளும் 5 குட்டிகளும் சுதந்திரமாக திரிவதாகவும் தீவிரமான கவனத்துடன் கண்காணிக்கப்படுவதாகவும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.