வெங்காயத்தை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாக, இந்தாண்டில் கையிருப்பில் வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2022-23 நிதியாண்டில், 2 லட்சத்து 50 ஆயிரம் டன் வெங்காயத்தை அரசு கையிருப்பில் வைத்திருந்தது. இந்த ஆண்டோ, அதை மூன்று லட்சம் டன்னாக உயர்த்தி இருப்பதாக நுகர்வோர் விவகாரத் துறை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை எதிர்கொள்ள இந்த சேமிப்பு உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெங்காயம் கெடாமல் இன்னும் நீண்ட நாள் கையிருப்பில் வைப்பது குறித்து அணுசக்தித் துறை மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையத்துடன் ஆராய்ந்து வருவதாகவும் கூறப் பட்டுள்ளது. சோதனை அடிப்படையில், மகாராஷ்டிராவில் காமா கதிர்வீச்சுடன் 150 டன் வெங்காயத்தை பரிசோதித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.