மத்திய அரசு இலவச ஆன்லைன் செயற்கை நுண்ணறிவுத் திறன் பயிற்சியை இந்திய மொழிகளில் தொடங்கியுள்ளது.
இந்தியா ஒரு தொழில்நுட்ப ஆர்வமுள்ள நாடு என்றும், இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டது ஒரு வெற்றிகரமான எடுத்துக்காட்டு என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி, தர்மேந்திர பிரதான், இந்திய மொழிகளில் இலவச ஆன்லைன் செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி வகுப்பான AI for India 2.0ஐ நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டம் 9 இந்திய மொழிகளில் தொகுக்கப்பட்டுள்ளது.