டெல்லி சர்வதேச விமானநிலையத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக நான்காவது ஓடுதளம் இயங்கத் தொடங்கியுள்ளது. மேலும் எக்ஸ்பிரஸ் கிராஸ் டாக்சி பாதையும் திறக்கப்பட்டுள்ளது.
இது விமானம் தரையில் ஓடும் 20 நிமிட நேரத்தை பத்து நிமிடமாக குறைக்கும். மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா ஓய்வு பெற்ற ஜெனரலும் இணை அமைச்சருமான வி.கே.சிங் உள்ளிட்டோர் நான்காவது ஓடுதளத்தை தொடங்கி வைத்தனர்.
ஏர் இந்தியா 821 விமானம் பீரங்கி மூலமாக நீர் மழைத் தூவி வாழ்த்துகள் முழங்க டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குப் புறப்பட்டுச் சென்றது.இந்த புதிய ஓடுதளம் காரணமாக விமான நிலையத்தில் தினமும் விமானங்களின் எண்ணிக்கை தற்போதைய 1500 ல் இருந்து 2 ஆயிரமாக அதிகரிக்கும்.
கூடுதலான பயணிகளையும் கையாள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.உலகின் மிகப்பெரிய விமான நிலையமான அமெரிக்காவின் அட்லாண்டாவை மிஞ்சும் வகையில் டெல்லி விமான நிலையத்தின் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.