நீண்டகால இழுபறிக்குப்பின்னர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மின்சாரக் கார் தொழிற்சாலையை தொடங்க உள்ளது.
20 லட்சம் ரூபாய் தொடக்கவிலையுடன், ஆண்டுக்கு 5 லட்சம் மின்சார கார்களை தயாரிக்க மத்தியஅரசுடன் டெஸ்லா நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது. வெளிநாட்டு இறக்குமதியுடன் உள்நாட்டு உற்பத்திக்கும் ஊக்கம் அளிக்கும் திட்டமாக இருக்கும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அண்மையில் அமெரிக்கா சென்ற போது எலன் மஸ்க் அவரை சந்தித்துப் பேச்சு நடத்திய நிலையில், இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.