இந்தியாவில் எந்த மதத்திற்கும் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக இந்தியா தீவிரவாதத்தின் பாதிப்புகளுக்கு ஆளாகி வருவதாகவும் அவர் கூறினார். சவூதி அரேபியாவின் முன்னாள் அமைச்சர் மற்றும் உலக முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச் செயலாளருமான டாக்டர் அல் இஸ்ஸா டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர் இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள போதும் மற்ற மதத்தவர்களுடன் இணக்கமாக வாழும் சூழல் இருப்பதாக கூறினார்.இந்திய அரசியலமைப்பு சட்டம் மதசார்பற்றது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
சவூதி அரேபிய அமைச்சரின் கருத்தை ஆமோதித்த அஜித் தோவல், இந்திய சகிப்புத்தன்மை மிகுந்த நாடு என்று கூறினார்.இந்தியாவில் எந்த மதத்திற்கும் எந்தவகையிலும் அச்சுறுத்தல் இல்லை என்றும் அஜித் தோவல் குறிப்பிட்டார்.