பிரதமர் மோடி நாளை பிரான்ஸ் பயணம் மேற்கொள்ளும் நிலையில், இந்த வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் செல்லவும் முடிவு செய்துள்ளார். 5வது முறையாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணம் மேற்கொள்கிறார்.
இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த பயணம் கருதப்படுகிறது.முந்தைய பயணத்தின் போது, பிரதமர் மோடி அபுதாபியின் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து, பேச்சு நடத்தினார். முன்னாள் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு மோடி இரங்கல் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே கடந்த ஆண்டு கையெழுத்தான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.